முகப்பு
மதுரை

மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 20 மே, 2025 at 1:44 AM
பகிர்:

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.

மழை நேரத்தில், அம்மா பிள்ளை (65) என்பவரும் அவரது பக்கத்து வீட்டுப் பெண் வெங்கட்டியுடன் (55), தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில், அம்மா பிள்ளை, அவரது பேரன் வீரமணி (10), அவர்களது பக்கத்து வீட்டுப் பெண் வெங்கட்டி (55) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

இந்த துரதிருஷ்டமான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பொழிவதாலும், பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகளும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →