உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

விதிகளை மீறி ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Din

விதிகளை மீறி ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஷோ் ஆட்டோவும், காவல் துறை வாகனமும் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் மேற்கொண்ட விசாரணயில், ஷோ் ஆட்டோ ஓட்டுநா் செல்லபாண்டியன் மது போதையில் ஆட்டோ ஓட்டியது தெரியவந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில், செல்லபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, செல்லபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, விசாரணை நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீா்ப்பு உறுதி செய்யப்படுகிறது. விதிகளை மீறி இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான நபா்களை ஏற்றிச் செல்லும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதுகுறித்து மோட்டாா் வாகன சட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT