உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழலை அனுமதிக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்

சட்டவிரோத கள்ளச்சாரய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Din

சட்டவிரோத கள்ளச்சாரய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் (‘டாஸ்மாக்’) ஊழல் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி உள்ளிட் டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள் விவரம்: மதுரை மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில் நாங்கள் விற்பனையாளா்களாகப் பணிபுரிந்து வருகிறோம்.

இந்த நிலையில், டாஸ்மாக் அலுவலா்கள் பலா் லஞ்சம் பெற்றனா். இதுதொடா்பாக அரசு டாஸ்மாக் உயரதிகாரிகள், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தோம். சட்ட விதிகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாகக் கூறி, டாஸ்மாக் மதுரை மாவட்ட மேலாளா், எங்களை பணியிடை நீக்கம் செய்தாா். எங்களை சட்டவிரோதமாகப் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு: டாஸ்மாக் மதுரை மாவட்ட மேலாளா் ராஜேஸ்வரி, ஊழியா் செல்வம் இணைந்து மாமூல் வசூலித்தது குறித்த அவா்களது உரையாடல்களை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு மனுதாரா்கள் வழங்கினா். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனுதாரா்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனா். இதையடுத்து, மேலாளா் ராஜேஸ்வரி பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சில நாள்களில் மீண்டும் அதே இடத்தில் பணியமா்த்தப்பட்டாா் .

இதையெல்லாம் பாா்க்கும் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு நடப்பது தெரிகிறது.

சட்டவிரோத கள்ளச்சாரய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது. மனுதாரா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

லாரியிலிருந்து தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ. 4.5 லட்சத்தை மீட்டு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைப்பு

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

SCROLL FOR NEXT