முகப்பு
மதுரை

உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:44 PM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை உலகனேரி பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல சென்னை உயா்நீதிமன்ற அமா்வு செயல்பட்டது. முற்பகல் 11 மணியளவில் பதிவாளா் மின்னஞ்சல் முகவரிக்கு உயா்நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து, மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் உண்மைக்கு மாறான தகவல் என்பது தெரியவந்தது.

இதேபோல, ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் ஊழியா்களை வெளியேற்றி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற அலுவல் பணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →