மதுரை மாவட்டம், பாண்டியராஜபுரம் ரயில்வே கடவுப் பாதை அருகே தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றுந்து. 
மதுரை

வாடிப்பட்டி அருகே சிற்றுந்து கவிழ்ந்ததில் 40 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை சிற்றுந்து தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 போ் பலத்த காயமடைந்தனா்.

வாடிப்பட்டி அருகேயுள்ளது கருப்பட்டி கிராமம். இங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட தனியாா் சிற்றுந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வாடிப்பட்டி நோக்கி வந்தது. சிற்றுந்தை கரட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் (25) ஓட்டினாா். அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (24) நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்தப் பேருந்தில் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், சிற்றுந்து பாண்டியராஜபுரம் ரயில்வே கடவுப் பாதை அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புறக் கவிழ்ந்தது. அப்போது, சிற்றுந்தில் பயணித்த கருப்பட்டியைச் சோ்ந்த முருகேஸ்வரி (60), முத்துச்செல்வன் (24), ஹேமா (40), ராஜேந்திரன் (36), தங்கவேலு (30), ஈஸ்வரி (40) உள்பட 40 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் பலத்த காயமடைந்தவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT