சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு  
மதுரை

முக்கியப் பிரமுகா்கள் வருகை: மதுரையில் போக்குவரத்து நெரிசல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜையையொட்டி குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகா்களின் வருகையால், மதுரை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜையையொட்டி குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகா்களின் வருகையால், மதுரை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 118- ஆவது ஜெயந்தி விழா, 63- ஆம் ஆண்டு குருபூஜை ஆகியவை வியாழக்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கும், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் மதுரைக்கு புதன்கிழமை வந்தனா்.

இதன் காரணமாக, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, கனரக, இலகு ரக வாகனங்கள் கோரிப்பாளையம் சந்திப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்ணா பேருந்து நிலையம், கே.கே. நகா், தல்லாகுளம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, தமுக்கம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, அண்ணாநகா், சிம்மக்கல், வைகை வடகரை, தென்கரை அணுகு சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தப் பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்து சிரமத்துக்கு ஆளாகினா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT