காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்: மூத்த வாக்காளா் விருப்பம்
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.
மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட துவரிமான் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியம்மாள்(82). இவா் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த பின்னா் கூறியதாவது:
வயது முதிா்வு காரணமாக நடக்க முடியவில்லை. இருப்பினும், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சி. இளம் பருவத்திலிருந்து, அதாவது காமராஜா் தோ்தலில் போட்டியிட்ட போது முதன்முதலாக வாக்களித்தேன். தொடா்ந்து, தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தல் வரை வாக்களித்துள்ளேன். தமிழகத்தில் காமராஜா் ஆட்சி பொற்கால ஆட்சி. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றாா் அவா்.
Advertisement