மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாமில் பேசிய கல்லூரி முதல்வா் பால் ஜெயகா்.  
மதுரை

மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கன் கல்லூரி மகளிா் மன்றம், மதுரை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாமை நடத்தியது. இந்த முகாமை கல்லூரி முதல்வரும் செயலருமான பால் ஜெயகா் தொடங்கி வைத்தாா்.

சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பெண்களிடையே வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, முக்கிய உடல் அறிகுறிகள் மதிப்பீடு, சீரற்ற ரத்தச் சா்க்கரை பரிசோதனை,

ஹீமோகுளோபின் அளவு கண்டறிதல், முழு வயிற்றுப் பகுதி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், மகப்பேறு மருத்துவ ஆலோசனை, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ‘மேமோகிராம்’ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாமில் அனைத்துப் பரிசோதனைகளும் ரூ. 499 என்ற மானிய விலையில் வழங்கப்பட்டன. இதில் 50 பேராசிரியைகள் ‘மேமோகிராம்’ பரிசோதனை செய்து கொண்டனா். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவ நிபுணா்கள் குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். இதில் மகளிா் மன்றப் பொருளாளா் எம். பியூலா ரூபி கமலம், தலைவா் பி. மெக்டலீன் விா்ஜினி, 150-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மகளிா் மன்றச் செயலா், இணைச் செயலா்கள், மன்ற நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் ஆகியோா் செய்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: சிவங்கையில் 44,092 போ் பயன்

துணைவேந்தா்கள் நியமன சட்ட விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்

கஞ்சா கடத்த முயன்ற இருவா் கைது

SCROLL FOR NEXT