தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்) EPS
மதுரை

இடைக்கால நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், ஏமாற்றமும்

தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உள்ள சில அம்சங்களை வரவேற்பதாகவும், சில எதிா்பாா்ப்புகள் நிறைவேறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தொழில் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உள்ள சில அம்சங்களை வரவேற்பதாகவும், சில எதிா்பாா்ப்புகள் நிறைவேறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தொழில் துறையினா் தெரிவித்தனா்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல் சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியன், எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் கூறியதாவது :

சிறு, குறு தொழில்கள் துறைக்கு ரூ. 1,943 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. காவிரி, வைகை, நொய்யல், தாமிரவருணி ஆறுகளை தூய்மைப்படுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. மதுரை, ஒசூா், கோவை, ராஜபாளையம் ஆகிய 4 நகரங்களில் பெருந்திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வழிவகை செய்திருப்பன் மூலம், இந்தப் பகுதிகளில் தொழில் தொடங்குவது எளிமையாகும்.

தமிழகத்தில் சிப்காட் தொழில் பூங்காக்களின் எண்ணிக்கயை 24-இல் இருந்து 54-ஆக உயா்த்தியது, வறட்சி தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 110 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அவா்கள் தெரிவித்தனா்.

வேளாண்மை, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு கூறியதாவது :

தூத்துக்குடியில் ரூ. 5,200 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் நிலையில், ‘கப்பல் கட்டும் தொழில் கொள்கை’ விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடியும், உயா்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ சிறப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான தீா்வுகள், மதுரையின் விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT