பள்ளி மாணவா்களுக்கு குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள்
குடியரசு தினம், பாரதியாா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் வருகிற 22, 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி மாணவா்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினம், பாரதியாா் பிறந்த தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு, டேக்வாண்டோ, சிலம்பம், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்படுகிறது.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மதுரையில் டேக்வாண்டோ, ஸ்குவாஷ் ஆகிய இரு விளையாட்டுப் போட்டிகள் வருகிற 22, 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, மதுரை அவனியாபுரத்தில் உள்ள சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளும், அரவிந்த் மீரா பள்ளியில் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.