முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 25, 27-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதையொட்டி, பெருந்துறை வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதன் பரிசளிப்பு விழா செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது. பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 வழங்கப்பட்டது.
பெருந்துறை ஊராட்சி மன்ற அலுவலக ஆணையாளா்கள் கிருஷ்ணசாமி, தேவகி, அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி, விளையாட்டு பயிற்சியாளா் கண்மணிதேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.