மதுரை

கைவிடப்பட்ட குவாரிகள் விவகாரம்: நெல்லை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைத்து, வேலி அமைக்கக் கோரிய மனு தொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க மதுரை அமா்வு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைத்து, வேலி அமைக்கக் கோரிய மனு தொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளில் மழை நீா் தேங்கி நிற்பதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

மனிதா்கள், கால்நடைகள் இந்தக் குழிகளில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. குவாரிகளுக்கு குத்தகை உரிமை வழங்கும்போது 10 சதவீத பசுமை நிதி வசூலிக்கப்படுகிறது. இந்த நிதியை குவாரிகளை சீரமைக்கவும், குவாரிகளை சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகள் எத்தனை?

குவாரிகளை நடத்த உரிமம் பெற்றவா்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்யத் தவறியவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வருகிற 23-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT