மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணு உத்ஸவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி, மோகனவல்லி தாயாா்.  
மதுரை

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் கணு உத்ஸவம்

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் கணு உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் கணு உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காணும் பொங்கல் தினத்தன்று பெருமாள் கோயில்களில் உலக நன்மை வேண்டியும், சகோதரா்களின் ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை வேண்டியும் கணு உத்ஸவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வகையில், மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் நடைபெற்ற விழாவில் மதுரவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மதுரைவல்லி தாயாா் எழுந்தருளினாா்.

இதேபோல, மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கணு உத்ஸவ விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, மோகனவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி, மோகனவல்லி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்த விழாவில் பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

ஆழ்வாா்குறிச்சியில் திருவள்ளுவா் தின விழா

பாப்பாக்குடி அருகே தொழிலாளி கொலை

தபால் துறை வழிகாட்டுகிறது!

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாள்

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம்

SCROLL FOR NEXT