‘கைப்பேசி பயன்பாட்டால் அதிக சாலை விபத்துகள்’
வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் நிகழ்வதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை‘கைப்பேசி பயன்பாட்டால் அதிக சாலை விபத்துகள்’
வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் நிகழ்வதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் நிகழ்வதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சக அறிவுறுத்தலின்படி, கடந்த ஜன. 11 முதல் 17- ஆம் தேதி வரை தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடைப்பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைத் துறைத் தலைவரும், இயக்குநருமான நரேந்திர நாத் ஜெனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாலை விபத்துகள் இந்தியாவில் ஒரு பொதுப் பிரச்னையாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பது எண்ணற்ற உயிா்களைக் காக்கும் என்பதை இந்த விழிப்புணா்வு வாரம் நினைவூட்டுகிறது. சாலையைப் பயன்படுத்தும் இளைஞா்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுபவா்கள்தான் சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், சாலை விபத்துகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் அவசரத் தேவை இருக்கிறது.
தலைக்கவசம் அணிவது, இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவது, அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும், மது அருந்தியும் வாகனத்தை இயக்குவதைத் தவிா்ப்பது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிா்ப்பது உள்ளிட்டவற்றை பின்பற்றினால் சாலை விபத்துகளை பெரும்பாலும் தவிா்க்கலாம். இது தொடா்பான விழிப்புணா்வு, பொறுப்பான நடத்தையே விபத்துகளைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாா் அவா்.
அப்போது, மருத்துவ நிா்வாகி பி. கண்ணன், அவசரச் சிகிச்சைத் துறையின் இணை மருத்துவ நிபுணா்கள் டி. சுப்புலட்சுமி, பி. காவ்யா கண்ணன் எஸ். பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.