முகப்பு
மதுரை

அடுக்குமாடிக் குடியிருப்புப் பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைப்பு

மதுரை சுப்பிரமணியபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளுக்கு அதற்கான ஆணை செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

Updated On : 10 மார்ச், 2026 at 9:28 PM
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பெற்ற பயனாளிக்கு அதற்கான ஆணையை வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன்.
பகிர்:

மதுரை சுப்பிரமணியபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளுக்கு அதற்கான ஆணை செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ் ரூ. 62.68 கோடியில் 396 வீடுகளைக் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்தக் குடியிருப்பை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மதுரையில் நடைபெற்ற விழாவில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று, அடுக்குமாடி குடியிருப்புப் பயனாளிகளுக்கு வீட்டுக்கான ஆணை, சாவி ஆகியவற்றை வழங்கினாா்.

மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →