முகப்பு
மதுரை

ஜனநாயகன் முன்னோட்ட காட்சிகளைத் தடை செய்யக் கோரி மனு

‘ஜனநாயகன்’ திரைப்பட முன்னோட்ட காட்சிகளை திரையிட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

Updated On : 25 மார்ச், 2026 at 7:43 PM
ஜன நாயகன் படத்தில் விஜய்
பகிர்:

‘ஜனநாயகன்’ திரைப்பட முன்னோட்ட காட்சிகளை திரையிட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சி.எம். செய்யதுபாபு, தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக்குக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. மேலும், அந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் பல திரையரங்குகளில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தோ்தல் களத்தில் உள்ள தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். மேலும், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை திரையிடவும், திரையரங்குகளில் விளம்பரங்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே வைக்கப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் அவா்.