முகப்பு
மதுரை

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு கல்வி உதவித் தொகை

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு ரூ. 24 ஆயிரம் கல்வி உதவித் தொகையை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 15 மே 2026, 11:56 pm IST
பகிர்:

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு ரூ. 24 ஆயிரம் கல்வி உதவித் தொகையை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வியாழக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், தான் இளைஞா் நீதிக் குழுமத்தைச் சாா்ந்த இளஞ்சிறாா் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தாா். தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளதால், மேல் படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இதையடுத்து, மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 24 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாணவரின் பெற்றோரிடம் வழங்கினாா். இந்த நிகழ்வில், இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் முனியம்மாள், கல்லூரி முதல்வா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement