ராமநாதபுரம்

கல்வி மாவட்ட தடகளத்தில் சாம்பியன்: முதுகுளத்தூர் மாணவருக்கு பாராட்டு

DIN

பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளுக்கான தடகளப்போட்டிகள் கமுதி கே.என் ஆண்கள் மேல்நிலைப்பபள்ளியில் கடந்த 9, 10-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் வி.அஜித் 19 வயது பிரிவில் 110 மீ. தடை ஓட்டத்தில் முதலிடமும், கம்பு ஊன்றி தண்டுதல் போட்டியில் முதலிடமும், உயரம் தண்டுதலில் முதலிடமும் பெற்றார். அவர் 20-க்கு 15 புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
ஒட்டு மொத்த புள்ளியில் கல்வி மாவட்ட அளவில் 50 புள்ளிகள் பெற்று முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தை பெற்றது. மாணவர் வி.அஜித்தையும், உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்சா,உசேன், அன்சாரி ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.எம். காதர்முகைதீன், கல்விக்குழுத் தலைவர் என்.கே.எம்.காதர் முகைதீன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான், உதவித் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்களும், கல்விக்குழு உறுப்பினர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
கமுதி மாணவிக்குப் பாராட்டு: அதே போன்று விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி அ.அபிநயா 14 வயது பிரிவில் 80 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியையும் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.பாலசுந்தரத்தையும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT