ராமநாதபுரம்

கமுதி பள்ளி மாணவர்கள் தூய்மை பணி ஊர்வலம்

DIN

கமுதியில் தனியார் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை பணி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
      விருதுநகர் 28 ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஆ. அன்சார் வழிகாட்டுதலின்பேரில், கமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை  மாணவர்கள் சார்பாக தூய்மை பணி ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து, பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் சேவையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
    இந்த ஊர்வலத்தை, பள்ளியின் செயலர் சிவமுருகன் துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். விருதுநகர் பட்டாலியன் ராணுவ ஹவில்தார் கிறிஸ்டோபர், ஊர்வலத்தை நெறிப்படுத்தினார். மாணவர்கள் தூய்மை குறித்த பதாகைகளை ஏந்தியவாறு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று, பின்னர் கமுதி அரசு  மருத்துவமனை வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் தேசிய மாணவர் படை  அதிகாரி சிவபாலசுந்தர் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT