ராமநாதபுரம்

திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கியில்  ஏடிஎம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கியில் ஏராளமான விவசாயிகள் சேமிப்புக் கணக்கு தொடங்கியுள்ளதால்  தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏடிஎம்) அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   திருவாடானை தாலுகாவில் தொண்டி,ஆர் எஸ் மங்கலம்,திருவாடானை ஆகிய பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இவ்வங்கியில் தற்போது பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவதற்காக ஒவ்வொரு வங்கியிலும் ஆயிரக்கணக்காண வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளனர்.
 தற்போது பெரும்பாலான வங்கிகளில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் உள்ளநிலையில்,  மத்திய கூட்டுறவு வங்கியில் இதுவரை  தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்கவில்லை. வரும் காலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டும். அப்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்படும்.  எனவே மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT