ராமநாதபுரம்

சேதமடைந்த நிலையில் சுகாதார வளாகம்

DIN

கமுதி அருகே காத்தனேந்தல் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் முற்றிலும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.
கமுதி அருகே காத்தனேந்தலில்  12 ஆண்டுகளுக்கு முன் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதர வளாகம் அமைக்கப்பட்டது.  அந்த வளாகத்தில் பெண்கள், சிறுவர்கள், மாற்று திறனாளிகளுக்கு  என தனி கழிப்பறை, குளியல் அறை, துணிகள் துவைக்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி  வந்தனர்.
இந்நிலையில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு  இந்த சுகாதார வளாகம்  சேதமடைந்தது. தற்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துற்நாற்றம்,  தொற்று நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி பொது மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT