ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அமைப்பின் கொடிக்கம்பத்தை நகராட்சி நிர்வாகம் அகற்ற முயல்வதைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆத்ம.கார்த்திக் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் மனு அளிக்க ஊர்வலமாக வந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்த போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் 5 பேர் மட்டுமே செல்ல அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திடீரென அவர்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து மனுவை அளித்தனர். அதில், கடந்த 15 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் இந்து முன்னணி கொடிக்கம்பத்தை நகராட்சி அகற்ற முயலுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT