முதுகுளத்தூரில் அரசு கல்லூரி வகுப்பறைகள் திறப்பு
முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரியின் புதிய கட்டடத்தில் வகுப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரியின் புதிய கட்டடத்தில் வகுப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 2012-13-இல் துவங்கப்பட்ட அரசு கலை கல்லூரி, முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் தாற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் முதுகுளத்தூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் ரூ.7.50 கோடி மதிப்பில் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் அண்மையில் திறந்து வைத்தார். இந்நிலையில் புதன்கிழமை முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி அனைத்து பிரிவு வகுப்புகளையும் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கல்லூரி முதல்வர் விமலா, பேராசிரியர் பாலமுருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைப்பாண்டி, அதிமுக ஒன்றிய நிர்வாகி புளியங்குடி முத்துராமலிங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், அலுவலர்களும்.மாணவர்களும் கலந்து கொண்டனர்.