முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை பகுதி மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கு தொடக்கம்

தினமணி செய்தி காரணமாக திருவாடானை தாலுகாவில் பயிர்க்காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தினமணி செய்தி காரணமாக திருவாடானை தாலுகாவில் பயிர்க்காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
திருவாடானை தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 42ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பளவில் நெல் விவசாயம் செய்யபட்டு வருகிறது. தற்போது பருவ மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க் காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில்  கணக்கு தொடங்க மத்திய கூட்டுறவு வங்கி மறுத்து வந்தது.
இது தொடர்பாக தினமணி நாளிதழில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் புதன்கிழமை மத்திய கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கணக்கு தொடங்கும் பணிகள் நடைபெற்றன. பயிர்க் காப்பீடு செய்ய குறைந்த நாள்களே உள்ள நிலையில் தாலுகா முழுவதும் உள்ள தொண்டி,ஆர்.எஸ் மங்கலம்,திருவாடானை ஆகிய இடங்களில்  மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கணக்கு தொடங்குவதற்காக குவிந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →