ராமநாதபுரம்

வேந்தோணி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

DIN

பரமக்குடி ஒன்றியம், வேந்தோணி கிராமம் லீலாவதி நகர் பகுதியில் அமைந்துள்ள குடிநீர்த் தேக்க தொட்டி குழாய்கள் சேதமடைந்துள்ளதால், குடிநீர் அதிகளவில் வீணாகி வருகிறது.
      வேந்தோணி கிராமம், குருவிப்பொட்டல், லீலாவதி நகர் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டியில் நீர் ஏற்றுவதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாய்கள், கடந்த சில மாதங்களாக சேதமடைந்துள்ளன. இதனால், அத்தொட்டியில் நீர் ஏற்றும்போது அதிக அளவில் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
     இப்பகுதியில் குடியிருப்போருக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், இவ்வாறு பல நாள்களாக வீணாக குடிநீர் வெளியேறுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
      இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT