ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 95 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

DIN

ராமேசுவரத்தில் விற்பதற்காக கடத்தி வரப்பட்ட 95 மதுபாட்டில்களை செவ்வாய்க்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக 2 பேர் பேர் கைது செய்யப்பட்டனர்.
   ராமேசுவரம் பகுதியில் முழுமையாக மதுகடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் சட்ட விரோதமாக பாம்பன் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து ரூ. 50-க்கு  கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்தது.  இதனை பாம்பன் காவல் சார்பு -ஆய்வாளர் குகலேந்திரன் தலைமையில் போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ராமேசுவரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சாக்கு மூட்டையுடன் வந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்தனர். சாக்கு மூட்டையை பிரித்து சோதனையிட்டபோது அதில் 96 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.  மேலும் அவர்கள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சண்முகம் (45)மற்றும் செந்தூர்பாண்டியன் ஆகியோர் என்பது தெரியவந்தது.   பாம்பன் பகுதியில் இருந்து மது பாட்டில் வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT