ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சியில் டெங்கு கொசுப்புழு: 30 பேரிடம் ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூல்

DIN

பரமக்குடி நகராட்சியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையாக 30 நபர்களிடமிருந்து ரூ 20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி-எமனேசுவரம் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிக்காக நகராட்சி சுகாதாரத்துறையினர் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் உள்ள கொசுப்புழுக்களை அழிக்கும் விதமாக கொசு ஒழிப்பு மருந்துகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பணியில் ஈடுபடுவோரை பணி செய்யவிடாமல் தடுப்போர் மீதும், கொசுப்புழுக்கள் உருவாகும் வகையில் தண்ணீர் நீர்த்தேக்க தொட்டிகள் வைத்திருந்த பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள தொட்டிகள் கண்டறியப்பட்டன. நகராட்சி சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளை பின்பற்றாத 30 நபர்களிடமிருந்து ரூ. 500 முதல் ரூ 5 ஆயிரம்வரை மொத்தம் ரூ 20 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசு ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் மீதும், நகராட்சியின் அறிவுரைகளை பின்பற்றாதவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் த.நாராயணன், சுகாதார ஆய்வாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT