ராமநாதபுரம்

தேவகோட்டையில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

தேவகோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவகோட்டை வட்டாசியர் அலுவலகம் முன்பாக சங்கத்தினர் மாவட்டத்தலைவர் ராசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவகோட்டை வட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலைவகித்தார். இந்தப்போராட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சிபிஎஸ் முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது மற்றும் எட்டாவது ஊதிய குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 17 பெண்கள் உட்பட 70 கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT