ராமநாதபுரம்

ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் தாமதம்

DIN

ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை பாம்பன் கடல் பகுதியில் வீசிய காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், 3 மணி 40 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
ராமேசுவரத்திலிருந்து மாலை 5 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். ஆனால், பாம்பன் கடல் பகுதியில் வீசிய காற்றின் வேகம் 58 கி.மீ.க்கும் அதிகமாக இருந்ததால், இந்த ரயில் ராமேசுவரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்குச் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் காத்திருந்தனர். சிலர், ரயில் நிலைய மேலாளரை சந்தித்து தாமதத்துக்கான விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, இரவு 8.40 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றதாக, ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT