சாயல்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காவிரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதிமுக
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காவிரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டு பேருந்து நிலையம், காமராஜர் சிலை போன்ற முக்கிய வீதிகளில் முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.