ராமேசுவரத்தில் கைதான துருக்கி நாட்டவர் புழல் சிறையில் அடைப்பு
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமேசுவரம் சேராங்கோட்டை மீனவ கிராமத்தில் சனிக்கிழமை சுற்றித்திரிந்த துருக்கி நாட்டை சேர்ந்த மகீர்தேவ்ரிமை (65) கடற்கரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர், இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போலீஸார் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருவாடானை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மகீர்தேவ்ரிம்மை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் அவரை, சிறையில் அடைத்தனர்.