முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலுக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய தேர்!

பரமக்குடி ஆயிரவைசியர்களுக்குப் புராதனப் பாத்தியமான ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலுக்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய மரத்தேர் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பரமக்குடி ஆயிரவைசியர்களுக்குப் புராதனப் பாத்தியமான ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலுக்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய மரத்தேர் செய்யப்பட்டுள்ளது.
 பரமக்குடி  ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருத்தேர் 180 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.இத்தேர் பழுதடைந்ததால், பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச்சங்க நிர்வாக ஆயிரவைசிய சபையினரின் முயற்சியால் நன்கொடைகள் மூலம் ரூ.45 லட்சம் நிதி திரட்டப்பட்டு, புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.   
 இந்த தேருக்கு வரும் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.54 மணிக்கு மேல் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு 7.02 மணிக்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.  இதைத்தொடர்ந்து, முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவின் 9-ஆம் நாள் மின்சார தீப அலங்கார பவனிக்காக கோயில் பரம்பரை அறங்காவலர்களான அம்பலம் பா.ஜெயராமன் செட்டியார், வா.ரவீந்திரன் செட்டியார், சோ.பாலசுப்பிரமணியன் செட்டியார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆயிரவைசிய சபைத் தலைவர் எஸ்.பாலுச்சாமி தலைமையில் செயலாளர் பா.ஜெகநாதன், பொருளாளர் ஏ.ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →