ராமநாதபுரம்

கமுதியில் காட்சிப் பொருளான மின்கம்பங்களைஅகற்றக் கோரிக்கை

DIN

கமுதி பகுதியில் பயன்பாடின்றி உள்ள மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகே  கே.வேப்பங்குளம் விலக்கு சாலையிலிருந்து குண்டுகுளம், வண்ணாங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.  இதற்காக இந்த இவ்வழித்தடத்தில், சாலையோரத்தில் மின் கம்பங்கள் அமைக்கபட்டது. அப்பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குண்டுகுளம் அருகே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றி மூலம் பக்கத்து கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதனையடுத்து கமுதியிலிருந்து அமைக்கப்பட்ட  மின்கம்பங்கள் வழியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்வயர்களும் அகற்றப்பட்டன. இங்கு மின்கம்பங்கள் மட்டும் காட்சி பொருளாக உள்ளன.  எனவே இங்குள்ள மின் கம்பங்களை அகற்றி, சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT