ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

DIN

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை முதல் வாபஸ் பெறுவதாகவும், வரும் அக். 15 ஆம் தேதி முதல் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளதாகவும் மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவித்தார். 
இது குறித்து அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது,
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்கவும், சேதமடைந்துள்ள படகுகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், டீசல் விலையை குறைக்கவும், மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்கவும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த அக். 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கினர். கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன்பிடி வர்த்தகம் பாதிப்படைந்தது. 
இந்நிலையில்,தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (அக்.13) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து வருகிற திங்கள்கிழமை (அக்.15) முதல் அனுமதி பெற்று மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT