கமுதி அருகே சூரியஒளி மின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கமுதி அருகே செங்கப்படையில் உள்ள அதானி சூரிய ஒளி மின் நிலையத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் சனிக்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கமுதி அருகே செங்கப்படையில் உள்ள அதானி சூரிய ஒளி மின் நிலையத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் சனிக்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கப்படையில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அதானி குழுமத்தின் சூரியஒளி மின் நிலையம் ரூ.4,536 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, 648 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த சூரிய ஒளி மின் நிலையத்தில், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், மாவட்ட வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறியது: இன்னும் ஓரிரு நாள்களில் மத்திய அமைச்சர் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர் என்றனர்.