ராமநாதபுரம்

கமுதி அருகே  233 அரிசி சிப்பங்கள் பறிமுதல்

DIN

கமுதி அருகே கோட்டைமேட்டில் உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்து வந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 233 அரிசி சிப்பங்களை, தேர்தல் பறக்கும்படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான, குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூரிலிருந்து கமுதிக்கு வந்த லாரியை சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி 25 கிலோ சிப்பம் 123, 10 கிலோ சிப்பம் 63, 5 கிலோ சிப்பம் 47 என, 233 சிப்பங்களை, தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசியுடன் லாரியை, கமுதி அரசு கிட்டங்கியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து சாயல்குடியைச் சேர்ந்த  லாரி ஓட்டுநர் முருகனை (29) கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT