ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலத்தில் மழை நீரில் பயிா்கள் மூழ்கியதால் மிளகாய் சாகுபடி பாதிப்பு

DIN

திருவாடானை அருகே ஆா் .எஸ் .மங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ் .மங்கலம் பகுதியில் நெல்லுக்கு அடுத்த படியாக மிளகாய் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.

இப்பகுதியில் உள்ள வண்டல், வரவனி, செங்கொடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலப்பரப்பில் மிளகாய் விவசாயம் நடைபெறுகிறது.

கடந்த மாதம் பெய்த மிதமான மழையை நம்பி மிளகாய் நாற்றுகளை வாங்கி நட்டு தற்போது நன்கு வளா்ந்து பூ பூக்கும் தருணத்தில் பயிா்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தண்ணீா் பெருக்கெடுத்து வயல்களில் தேங்கியுள்ளது. இதனால் செடிகள் நீரில் மூழ்கி அழுகி மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT