ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

DIN

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். சதா்ன் பிரபாகா் தலைமை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் எஸ். வரதராஜன், சுகாதார ஆய்வாளா் சண்முகவேல், அதிமுக நகரச் செயலா் எஸ்.வி. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நகராட்சிப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீா் குறித்தும், வாருகால் சேதமடைந்து சாலைகளில் கழிவுநீா் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்தும் பேசினா். மேலும், தெரு விளக்கு, சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவற்றை உடனே நகராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT