ராமநாதபுரம்

தங்கச்சிமடத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தங்கச்சிமடம் ஊராட்சியில் 1 டன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருள்களை, அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

DIN

தங்கச்சிமடம் ஊராட்சியில் 1 டன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருள்களை, அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
      ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் ஊராட்சிப் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களில், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். சித்ரா தலைமையில்  திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில், 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
     மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 
    இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர்கள் ஜீவா, செந்தில்குமார் மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சி செயலர் கதிரேசன் மற்றும் போலீஸார் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT