ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஜன. 21 முதல் இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி

DIN

ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் இலவச கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி தொடங்குகிறது.
 இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படுகிறது. மையம் சார்பில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் ஆடவர்களுக்கான குளிர்சாதன பழுதுநீக்கல் உள்ளிட்டவையும், மகளிருக்கான அப்பளம், ஊறுகாய், மசாலா உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.
 பயிற்சியில் சேர விரும்புவோருக்கு கட்டணம் ஏதுமில்லை. இலவசமாகவே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியின் போது காலை, மாலை உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கான அனைத்துப் பொருள்களும் மையம் சார்பில் வழங்கப்படும். 
 பயிற்சியில் கிராம, ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பயிற்சியில் சேர வயது வரம்பு 19 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்து நாள்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி குறித்து மேலும் விவரங்களை அறிய 04567-221612 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். பயிற்சி மைய அலுவலகத்துக்கு நேரில் வந்து பெயர்களைப் பதிவு செய்பவர்களுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT