ராமநாதபுரம்

திருவள்ளுவர் தினவிழா

DIN


தேவகோட்டையில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் ஐந்தாம் ஆண்டு திருவள்ளுவர் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு திருவள்ளுவர் தமிழ் மன்றத் தலைவர் இலக்கியமேகம் நா.சீனிவாசன் தலைமை வகித்தார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் அபிமன்யூ முதல் இடமும், அபிஷேக் இரண்டாம் இடமும், வேல்முருகன் மூன்றாம் இடமும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் நந்தினி, ஆண்டாள் அபி, பிரியங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மாலையில் பெண்களுக்கான கோலப்போட்டி, முதியவர்களுக்கு நடைப்போட்டி, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆசிரியை ஜோதி தலைமையில் மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம், நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் பி.மணிகண்டன், வட்டாரக்கல்வி அலுவலர் லட்சுமி தேவி உள்ளிட்டோர் விழாவில் பேசினர். முன்னதாக பொருளாளர் நாராயணன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் தமிழ் மன்ற விழாக்குழுவினர் செய்திருந்தனர். செயலர் தாமஸ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT