ராமநாதபுரம்

குடிநீர் தட்டுப்பாடு: கடலாடி கல்லூரி மாணவர்கள் அவதி

கடலாடி அரசுக் கல்லூரியில் போதிய குடிநீர் இன்றி அவதிப்படுவதால் காவிரி குடிதண்ணீர்

DIN

கடலாடி அரசுக் கல்லூரியில் போதிய குடிநீர் இன்றி அவதிப்படுவதால் காவிரி குடிதண்ணீர் இணைப்பு வழங்கவேண்டுமென என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசுக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினியியல், வணிகவியல் போன்ற பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் ஒவ்வொரு  ஆண்டும் 250  மாணவர்கள் புதிதாக சேர்ந்து படித்து வந்தனர்.  இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  500-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள்  படிக்கும் இக்கல்லூரிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர்  கொ.வீரராகவ ராவிடமும் புகார் மனு அளித்தனர். ஆனாலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலாடிஅரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு உள்ளது. அதே சமயம் அரசுக் கல்லூரிக்கு மட்டும் இதுவரை அதிகாரிகள் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  எனவே  மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இக்கல்லூரிக்கு காவிரிகூட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிகை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT