ராமநாதபுரம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை, மீண்டும் பணியில் அமர்த்துவதை எதிர்த்து, கமுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, புதிதாக படித்த இளைஞர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தினால் மாவட்ட, மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தினர். 16 வருவாய் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை: ஓய்வு பெற்ற  கிராம நிர்வாக அலுலர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்துவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசானையை ரத்துசெய்யக்கோரி தேவகோட்டை வட்ட கிராம நிர்வாக அலுலர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை  வட்டாட்சியர் அலுலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவகோட்டை வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT