ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவர்களுக்கு 7 ஆவது முறையாக இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

DIN

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு, ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 7 ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
      ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜனவரி 13 ஆம்  தேதி கடலுக்குச் சென்ற மீனவர்களில் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் விசைப்படகுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். இதில், 2 கல்லூரி மாணவர்களும் அடங்குவர்.
     இதனிடையே, இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொடர்ந்து மீனவர்களின் காவலை நீட்டித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது.
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 7 ஆவது முறையாக ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு நீதிபதி ஜூட்சன், இவர்களின் காவலை ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மீனவர்கள் 8 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT