ராமநாதபுரம்

தேர்தல்  விதிமீறல்: அதிமுக கூட்டணி கட்சியினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு

முதுகுளத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் 21 பேர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

DIN

முதுகுளத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் 21 பேர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர் ஒன்றியத்தின் சார்பில் ராமநாதபுரம் பாஜக, மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும் அதிகமான வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இதுதொடர்பாக தேர்தல் விதிமுறைகளை மீறியதாக  கூறி பறக்கும்படை அலுவலர் பாலசரவணன் முதுகுளத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தர்மர் உள்பட கூட்டணிக் கட்சியினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT