ராமநாதபுரம்

பைக்கில் சென்று மயங்கி விழுந்து காயமடைந்த விவசாயி பலி

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில்  சென்று மயங்கிவிழுந்து காயமடைந்த விவசாயி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.

DIN


முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில்  சென்று மயங்கிவிழுந்து காயமடைந்த விவசாயி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செம்பொன்குடி தெற்குத்தெருவைச் சேர்ந்த பாண்டியன்(27). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை தனது ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருவரங்கம் சென்ற போது மயக்கமடைந்து  கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் சனிக்கிழமை இறந்தார். 
இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். விபத்து குறித்து  அவரது மனைவி காளீஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் கீழத்தூவல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT