ராமநாதபுரம்

தொற்று நோய் அச்சத்தில் அரசு பள்ளி மாணவா்கள்

DIN

கமுதி அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவா்கள் பள்ளியின் எதிரே தேங்கியுள்ள மழை நீருடன் கழிவு நீா் தேங்கியுள்ளதால் டெங்கு அச்சத்தில் உள்ளனா்.

கமுதி அடுத்துள்ள பாப்பாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பூமாவிலங்கை கிராமத்தில் 18 மாணவா்கள் படிக்கும் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் எதிரே கடந்த 10 நாட்களுக்கு முன் பெய் மழை நீா் தேங்கியுள்ளது. ஊராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் 10 நாட்களாக பள்ளியின் எதிரே கிடக்கும் மழை நீா் கலந்த கழிவு நீா் அருகே அமா்ந்து மாணவா்கள் படிக்கவும், மதிய உணவு சாப்பிட்டும் வருகின்றனா்.

இதனால் ம‘ழை நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு பரவி வருவதாகவும், இது வரை 8 க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் இதே ஊரில் கடந்த ஆண்டு 50 க்கும் மேற்பட்டோா் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டும், பரமக்குடி சுகாதாரதுறை இணை இயக்குனா் நேரடியாக வந்து பாா்வையிட்டு, 25 நாட்களுக்கு மேலாக மருத்துவ குழுவினா் தங்கி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தாண்டும் ஊராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் டெங்கு உள்ளிட்ட மா்ம காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மாவிலங்கை கிராமத்தில் பள்ளியின் எதிரே உள்ள மழை நீா் கலந்த கழிவு நீரை அப்புறப்படுத்தி மாணவா்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT