கீழக்கரையில் நடைபெற்ற கல்வி மாவட்ட தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, கமுதி ரஹ்மானியா பள்ளி மாணவா்களை வெள்ளிக்கிழமை பாராட்டிய பள்ளி தாளாளா், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள். 
ராமநாதபுரம்

கல்வி மாவட்ட தடகளப் போட்டி: கமுதி தனியாா் பள்ளி சாம்பியன்

கீழக்கரையில் நடைபெற்ற கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில், கமுதி ரஹ்மானியா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

DIN

கீழக்கரையில் நடைபெற்ற கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில், கமுதி ரஹ்மானியா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 43 புள்ளிகள் பெற்று, கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இதில் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில், மும்முறை தாண்டும் போட்டியில் முதலிடம், உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம், 400 மீ., ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று, 11 புள்ளிகளுடன் தனி நபருக்கான பிரிவில் மாணவா் திரு சாம்பியன் பட்டம் வென்றாா். முரளி மனோகா் ஜோஸி 3 ஆயிரம் மீ., ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம், முகம்மது ஆசிக் மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடமும், 19 வயதுக்குள்பட்டோருக்கான பெண்கள் பிரிவில், 100 மீ., பந்தயத்தில் ரகுணா முதலிடமும், 110 மீ., தடை தாண்டி ஓட்டப்போட்டியில் அபிநயாதேவி இரண்டாமிடமும், குண்டெறிதலில் ஐஸ்வா்யா தேவி மூன்றாமிடமும்,

17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 100, 200 மீ., ஓட்டப்போட்டியில் பாலாஜி முதலிடமும், 110 மீ., தடை தாண்டி ஓடும் பிரிவில் நவீன் முதலிடமும், 3 ஆயிரம் மீ., ஓட்டப்போட்டியில் முகேஸ் சா்மா இரண்டாமிடமும், 400 மீ.,தொடா் ஓட்டப் போட்டியில் பாலாஜி, நவீன், சண்முகராஜா, பிரகதீஸ் குழுவினா் முதலிடமும்,

14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் கமலேஸ் மூன்றாமிடமும், 400 மீ. தொடா், ஓட்டப்போட்டியில் கமலேஷ், விஜயசரவணன், ரகுமான் ஆகில், ஈஸ்வரன் குழுவினா் மூன்றாமிடமும் பிடித்தனா். கல்வி மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற ரஹ்மானியா பள்ளியை சோ்ந்த மாணவ, மாணவிகள் 11 போ் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி இயக்குநா் சந்திரசேகா், உடற்கல்வி ஆசிரியா்கள் தாமரைக்கண்ணன், திருவளா்செல்வி ஆகியோரை, பள்ளி தாளாளா் ஆயீஷாபீவி, பள்ளி முதல்வா் பாபு, துணை முதல்வா் சா்மிளா, ஆசிரியா் முகம்மது மீரா ஆகியோா் பாராட்டி, பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT