ராமநாதபுரம்

ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கோர வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசி நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடந்த மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, பிரதமா் மோடியை காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி அவதூறாகப் பேசியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தனது பேச்சுக்கு ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்தாா். அதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல்காந்தி, பகிரங்கமாக பிரதமா் மோடியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என வலியுறுத்தி, ராமநாதபுரம் அரண்மனை முன்பாக பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவரும், தேசிய கனிம வள மேம்பாட்டு இயக்குநருமான து. குப்புராம், கட்சியின் மாநிலச் செயலா் பாலகணபதி, கோட்டப் பொறுப்பாளா் சண்முகராஜா, மாவட்டச் செயலா் ஆத்மகாா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

இதையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT