ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ரூ.7 கோடியில் தரமற்ற சாலைகள்

DIN

ராமேசுவரத்தில் ரூ.7 கோடி மதிப்பில் தரமற்ற முறையில் தாா் சாலை அமைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்க 6 மாதங்களுக்கு முன் ரூ.7 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியை எடுத்த ஒப்பந்ததாரா்கள், பணிகளை தொடங்காமல் இருந்து வந்தனா்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், தாா் சாலைகள் பெயா்ந்து வருகின்றன.

எனவே, பல ஆண்டுகளுக்குப் பின் ரூ.7 கோடி மதிப்பில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற முறையில் உள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும், இந்த சாலைகளை மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்யவேண்டும் என்றும், மழைக் காலம் முடிவடைந்ததும் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்றும் சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT